mardi 24 décembre 2013

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும். சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள். இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும். இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.

தமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை யாவன என்பது பின் வருமாறு :

1 பிரபவ**********1987 - 1988 2 விபவ***********1988 - 1989 3 சுக்ல************1989 - 1990 4 பிரமோதூத******1990 - 1991 5 பிரசோற்பத்தி****1991 - 1992 6 ஆங்கீரச*********1992 - 1993 7 ஸ்ரீமுக***********1993 - 1994 8 பவ*************1994 - 1995 9 யுவ ************1995 - 1996 10 தாது************1996 - 1997 11 ஈஸ்வர*********1997 - 1998 12 வெகுதானிய****1998 - 1999 13 பிரமாதி********1999 - 2000 14 விக்கிரம*******2000 - 2001 15 விஷு*********2001 - 2002 16 சித்திரபானு****2002 - 2003 17 சுபானு********2003 - 2004 18 தாரண*********2004 - 2005 19 பார்த்திப*******2005 - 2006 20 விய**********2006 - 2007 21 சர்வசித்து*****2007 - 2008 22 சர்வதாரி ******2008 - 2009 23 விரோதி*******2009 - 2010 24 விக்ருதி*******2010 - 2011 25 கர************2011 - 2012 26 நந்தன********2012 - 2013 27 விஜய********2013 - 2014 28 ஜய**********2014 - 2015 29 மன்மத*******2015 - 2016 30 துன்முகி******2016 - 2017 31 ஹேவிளம்பி***2017 - 2018 32 விளம்பி*******2018 - 2019 33 விகாரி********2019 - 2020 34 சார்வரி*******2020 - 2021 35 பிலவ********2021 - 2022 36 சுபகிருது******2022 - 2023 37 சோபகிருது*****2023 - 2024 38 குரோதி********2024 - 2025 39 விசுவாசுவ*****2025 - 2026 40 பரபாவ********2026 - 2027 41 பிலவங்க******2027 - 2028 42 கீலக*********2028 - 2029 43 சௌமிய *****2029 - 2030 44 சாதாரண******2030 - 2031 45 விரோதகிருது**2031 - 2032 46 பரிதாபி*******2032 - 2033 47 பிரமாதீச******2033 - 2034 48 ஆனந்த******2034 - 2035 49 ராட்சச******2035 - 2036 50 நள*********2036 - 2037 51 பிங்கள******2037 - 2038 52 காளயுக்தி****2038 - 2039 53 சித்தார்த்தி****2039 - 2040 54 ரௌத்திரி****2040 - 2041 55 துன்மதி******2041 - 2042 56 துந்துபி*****2042 - 2043 57 ருத்ரோத்காரி**2043 - 2044 58 ரக்தாட்சி *****2044 - 2045 59 குரோதன******2045 - 2046 60 அட்சய******2046 - 2047

தமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை யாவன என்பது பின் வருமாறு :

1 பிரபவ**********1987 - 1988 2 விபவ***********1988 - 1989 3 சுக்ல************1989 - 1990 4 பிரமோதூத******1990 - 1991 5 பிரசோற்பத்தி****1991 - 1992 6 ஆங்கீரச*********1992 - 1993 7 ஸ்ரீமுக***********1993 - 1994 8 பவ*************1994 - 1995 9 யுவ ************1995 - 1996 10 தாது************1996 - 1997 11 ஈஸ்வர*********1997 - 1998 12 வெகுதானிய****1998 - 1999 13 பிரமாதி********1999 - 2000 14 விக்கிரம*******2000 - 2001 15 விஷு*********2001 - 2002 16 சித்திரபானு****2002 - 2003 17 சுபானு********2003 - 2004 18 தாரண*********2004 - 2005 19 பார்த்திப*******2005 - 2006 20 விய**********2006 - 2007 21 சர்வசித்து*****2007 - 2008 22 சர்வதாரி ******2008 - 2009 23 விரோதி*******2009 - 2010 24 விக்ருதி*******2010 - 2011 25 கர************2011 - 2012 26 நந்தன********2012 - 2013 27 விஜய********2013 - 2014 28 ஜய**********2014 - 2015 29 மன்மத*******2015 - 2016 30 துன்முகி******2016 - 2017 31 ஹேவிளம்பி***2017 - 2018 32 விளம்பி*******2018 - 2019 33 விகாரி********2019 - 2020 34 சார்வரி*******2020 - 2021 35 பிலவ********2021 - 2022 36 சுபகிருது******2022 - 2023 37 சோபகிருது*****2023 - 2024 38 குரோதி********2024 - 2025 39 விசுவாசுவ*****2025 - 2026 40 பரபாவ********2026 - 2027 41 பிலவங்க******2027 - 2028 42 கீலக*********2028 - 2029 43 சௌமிய *****2029 - 2030 44 சாதாரண******2030 - 2031 45 விரோதகிருது**2031 - 2032 46 பரிதாபி*******2032 - 2033 47 பிரமாதீச******2033 - 2034 48 ஆனந்த******2034 - 2035 49 ராட்சச******2035 - 2036 50 நள*********2036 - 2037 51 பிங்கள******2037 - 2038 52 காளயுக்தி****2038 - 2039 53 சித்தார்த்தி****2039 - 2040 54 ரௌத்திரி****2040 - 2041 55 துன்மதி******2041 - 2042 56 துந்துபி*****2042 - 2043 57 ருத்ரோத்காரி**2043 - 2044 58 ரக்தாட்சி *****2044 - 2045 59 குரோதன******2045 - 2046 60 அட்சய******2046 - 2047

33 thoughts

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது. 7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்! 8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை. 9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு. 10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார். 11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள் 12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள் 13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய் 14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை 15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள் 16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம் 17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள் 18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம் 19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும் 20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும் 21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும் 22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம். 23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான் 24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள் 25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும் 26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர் 27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான் 28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை. 29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும். 30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம் 31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும் 32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம். 33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது. 3

vendredi 11 octobre 2013

முக்கிய வருடங்கள்

1. இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் அறிவிக்கப்பட்டது எப்போது ?
     31 .01 .1963
2.  இந்தியாவின் முதல் சட்டப்பல்கலைக்கழகம் எங்கு துவக்கப்பட்டது ?
     சென்னை - 1997
3 . இந்திய சுயராஜ்ய தினம் முதலில் எப்போது கொண்டாடப்பட்டது ?
      26 .01 .1930
4 . இந்திய கம்பெனிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது ?
      1956
5 . முதல் ஆசியப் போட்டி எங்கு நடைப்பெற்றது ?
      டில்லி - 1951
6 . ஜனாதிபதி ஆட்சிக்கு உட்பட்ட முதல் மாநிலம் எது ?
      பஞ்சப் - 1951
7 .இந்தியாவில் மெட்ரிக் எடை முறை எப்போது அறிமுகமானது?
      26 .01 .1950
8 . முதல் தேசிய கீதம் எப்போதுப் பாடப்பட்டது ?
      27 .12 .1911
9 . உலக தமிழாராய்ச்சி நிறுவனம் எங்கு ஏற்படுத்தப்பட்டது ?
      சென்னை - 1970
10 . இந்தியாவின் முதல் சூரிய வெப்ப மின்நிலையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
       1990 - ஹரியானா 

பூமியைப் பற்றி .....

  • பூமியின் வயது 4 .6 பில்லியன் வருடங்கள்.
  • பூமியின் நிலப்பரப்பு 29 %.
  • பூமியின் நீர்ப்பரப்பு 71 % .
  • பூமியின் கன அளவு 1.083 X 1024  க.மீ.
  • பூமியின் எடை 5.976 X 1024 கி.கி.
  • பூமியின் சுற்றளவு 40075 கி.மீ.
  • பூமியிலிருந்து  சூரியனின் தொலைவு 149.6 மில்லியன் கி.மீ.
  • பூமி சூரியனைச் சுற்றும் வேகம் 1700 கி.மீ. / ம.
  • பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ள ஆகும் நேரம் 23:56:4:09.
  • பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் நேரம் 365 நாள் 6 மணி 9 நிமிடம் 9.54 வினாடிகள்.
  • பூமியின் ஆழ் கடல் பசிபிக் பெருங்கடல் 
  • பூமியின் உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் சிகரம். ( 8848 மீ. )
  • பூமியின் தாழ்ந்த நிலம் சாக்கடல் ( Dead see )
  • பூமியின் தாழ்ந்த நிலமான சாக்கடலின் தாழ்வு நிலை 399 மீ. ( கடல் மட்டத்தை விட )
  • பூமியிலுள்ள நிலங்களின் சராசரி உயரம் 756 மீ .
  • பூமியின் சம நோக்கு நாட்கள் மார்ச் 21, செப்டெம்பர் 23.
  • அதிகமான இரவும் அதிகமான பகலும் ஏற்படும் பகுதி துருவப்பகுதி.
  • பூமியின் வட கோளத்தின் நீண்ட நாள் ஜூன் 21 .
  • பூமியின் தென் கோளத்தின் நீண்ட நாள் டிசம்பர் 22 .
  • பூமியின் துருவப்பகுதியில் சாய்வு 23  1/2 ° .
  • பூமி சூரியனைச் சுற்றும் வேகம் 29.8 கி.மீ/நி. 
  • பூமி சூரியனைச் சுற்றும் அதிகபட்ச தூரம்(aphelion) 152 மில்லியன் கி.மீ.
  • பூமி சூரியனைச் சுற்றும் குறைந்த பட்ச தூரம்(perihelion) 147 மில்லியன் கி.மீ.
  •  பூமியை சூழ்ந்துள்ள வாயு மண்டலத்தின் உயரம் 960 கி.மீ.

பொன்னாங்கண்ணிக் கீரைக்கு 83 பெயர்கள்

  1. அண்டர் நிலை அலகு 
  2. அனுமான் சக்கா 
  3. அணுமாசக் கண்ணி 
  4. இந்திரானூரி 
  5. இந்திராணி காணி
  6. உடுக்காட்டி
  7. உம்பரூர் 
  8. உழவணிகச் செடி
  9. உழவணிகம்
  10. கடுஞ்சீ தளத்தி 
  11. கண்ணுக்கனி மூலம்
  12. கண்ணுக்கினியாள் 
  13. கரிப்பாலை
  14. கல்லுக்கலை  காத்தான்
  15. கல்லுக்கவைத்தளை 
  16. கற்பூரக்கண்ணி
  17. காணி
  18. காரியசித்தி
  19. காயசித்தி
  20. காளவடிவழகி
  21. கொடுப்பை
  22. சகச்சை
  23. சகாதேவி
  24. சிந்தாமணி
  25. சித்தமன்
  26. சித்தி
  27. சிதகி
  28. சிதசிக்கண்ணிச்செடி 
  29. சிதம்பூரம்
  30. சிதலிச்செடி 
  31. சிதளி 
  32. சீமைப்பொன்னாங்கண்ணி
  33. சீதளசக்தி 
  34. சீதளி 
  35. சீதனி
  36. சீதப்புறம் 
  37. சீதலிச்செடி
  38. சீதாபூரம்
  39. சீதேவி
  40. சீதேவிச்செடி
  41. சீதை
  42. சீரணிக்கண்ணிச்செடி
  43. சீரிணம்
  44. சுகதிர
  45. சுவாது வர்ணம்
  46. சூரைமான்
  47. சூரைமார்கண்ணி
  48. செங்கண்ணி
  49. செம்புசத்துமூலி
  50. சோமகண்ணி
  51. சோமவல்லரி
  52. தசமைக்கண்ணி 
  53. திரேகசித்தி
  54. தியாகக்கண்ணி
  55. தீயாக்கரை
  56. தேவரூர்
  57. நட்சத்திரத்தோன்றி
  58. நாட்டுப்பொன்னாங்கண்ணி
  59. நிரோவடி 
  60. நேத்திரநாசி
  61. பகல் நட்சத்திரத்தோன்றி
  62. பத்தூரம்
  63. பதுமாலயம்
  64. பித்தசாந்திபூனாற்கண்ணிக்கீரை
  65. பெருங்கொடுப்பை
  66. பொற்கண்ணி
  67. பொற்காணி
  68. பொன்காளி
  69. பொன்மூலி
  70. பொன்மேனி
  71. பொன்னாங்கண்ணி
  72. பௌதிக மங்கை
  73. மச்சாக்கி
  74. மச்சிக்கண்ணி
  75. மச்சியாத்தி
  76. மீனாட்சி
  77. மூசி
  78. மைசாட்சி
  79. வரிக்கண்ணி
  80. வத்தூரம்
  81. வாது வர்ணம்
  82. வானநாடி
  83. விண்ணுக்குள்  மூர்த்தி

27 விண்மீன்களின் தமிழ்ப்பெயர்கள்

வ. எண்
தமிழ்
சமற்கிருதம்

கிரேக்கம்


1
புரவி
அசுவினி
Hamal
2

அடுப்புக்கொண்டை
பரணி
Sheratan
3

ஆரல்
கார்த்திகை
Pliades

4
சகடு
உரோகிணி
Aldebaran

5
மான்தலை
மிருக சீரிடம்
Bellatrix

6
மூதிரை
திருவாதிரை
Betelgeuse

7
கழை
புனர் பூசம்
Pollux

8
காற்குளம்
பூசம்
Tegmine

9
கட்செவி
ஆயில்யம்
Acubens

10
கொடுநுகம்
மகம்
Regulas

11
கணை
பூரம்

Zozma

12
உத்திரம்
உத்திரம்
Denebola

13
ஐவிரல்
அத்தம்
D.Corvi

14
அறுவை
சித்திரை
Spica

15
விளக்கு
சுவாதி
Boots Arcturus

16
முறம்
விசாகம்
Libra

17
முடப்பனை
அனுசம்
Graffias

18

துளங்கொளி

கேட்டை
Antares

19
குருகு
மூலம்
Acumen

20
உடைகுளம்
பூராடம்
Rukbat

21
கடைகுளம்
உத்திராடம்
Facies

22

முக்கோல்
திருவோணம்
Aquila
23

காக்கை
அவிட்டம்
Delphinus
24

செக்கு
சதயம்
Sadal Malek
25

நாழி
புரட்டாதி
Markab
26

முரசு
உத்திரட்டாதி
Algenib
27

தோணி
ரேவதி
Alrescha

பத்து முதல் அனந்தம் வரை விளக்க

10   பத்து = 100
100  பத்து = 1000
1000 பத்து = 10,000
10,000 பத்து = லட்சம்
1,00,000 பத்து = பத்து நூறாயிரம்
10 நூறாயிரம் பத்து   =  கோடி
கோடி     கோடி =  மகா கோடி (10,000,000,00,00,000)
மகாகோடி  கோடி = சங்கு(சங்கம்)
சங்கு(சங்கம்) கோடி = மகாசங்கு (மகாசங்கம்)
மகசங்கு    கோடி  = விந்தம்
விந்தம்     கோடி  = மகவிந்தம்
மகவிந்தம்  கோடி  = பதுமம் (சமுத்திரம்)
பதுமம்     கோடி  = மகாபதுமம் (மகா சமுத்திரம்)
மகாபதுமம்    கோடி  =  குமுதம்
குமுதம்       கோடி  =  மகா குமுதம்
மகா குமுதம்  கோடி  =  சிந்து
சிந்து          கோடி  =  மகா சிந்து
மகாசிந்து      கோடி  =  வெள்ளம்
வெள்ளம      கோடி  =  மகா வெள்ளம
மகா வெள்ளம் கோடி  =  பிரளயம்
பிரளயம்       கோடி  =  மகா பிரளயம்
மகா பிரளயம்  கோடி  =  சஞ்சலம்
சஞ்சலம்       கோடி  =  மகா சஞ்சலம்
மகா சஞ்சலம்  கோடி  =  வலம்புரி
வலம்புரி       கோடி  =  மகா வலம்புரி
மகா வலம்புரி  கோடி  =  தன்பணை
தன்பணை      கோடி  =  மகா தன்பணை
மகாதன்பணை  கோடி  =  கண்வளை
கண்வளை      கோடி  =  மகாகண்வளை
மகா கண்வளை கோடி  =  அனந்தம்

யாருக்கு எத்தனை அறிவு?

ஓரறிவு    -    மரம், புல், பூண்டு.
ஈரறிவு     -   சங்கு, நத்தை, மீன் வகை.
மூன்றறிவு -   கரையான், ஈசல்.
நான்கறிவு  -  நண்டு, தும்பி.
ஐந்தறிவு   -   கால்நடை, பறவை.
ஆறறிவு   -   மனிதன்.

முடியவே முடியாது

யாராலும் கண்களைத் திறந்துக்கொண்டு தும்ம முடியாது.

பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது.

யானையால் குதிக்கவும் தாண்டவும் முடியாது

பன்றிகள் வானத்தை அண்ணாந்துப் பார்க்க முடியாது.

பறந்தாலும் நின்றாலும் அமர்ந்தாலும் தட்டான்பூச்சிகளுள் இறக்கையை மடக்க முடியாது.

கிவி பறவைகளால் 2 அடிகூட பறக்க முடியாது.

முதலைகளால் நாக்கை வெளியே நீட்ட முடியாது.

முதலை மற்றும் திமிங்கலம் போன்றவை மீன்களைப் போல் நீருக்குள் மூச்சுவிட முடியாது.

எந்த ஒரு காகிதத்தையும் பாதி பாதியாக ஏழு தடவைக்கு மேல் மடிக்க முடியாது.