vendredi 11 octobre 2013

முக்கிய வருடங்கள்

1. இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் அறிவிக்கப்பட்டது எப்போது ?
     31 .01 .1963
2.  இந்தியாவின் முதல் சட்டப்பல்கலைக்கழகம் எங்கு துவக்கப்பட்டது ?
     சென்னை - 1997
3 . இந்திய சுயராஜ்ய தினம் முதலில் எப்போது கொண்டாடப்பட்டது ?
      26 .01 .1930
4 . இந்திய கம்பெனிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது ?
      1956
5 . முதல் ஆசியப் போட்டி எங்கு நடைப்பெற்றது ?
      டில்லி - 1951
6 . ஜனாதிபதி ஆட்சிக்கு உட்பட்ட முதல் மாநிலம் எது ?
      பஞ்சப் - 1951
7 .இந்தியாவில் மெட்ரிக் எடை முறை எப்போது அறிமுகமானது?
      26 .01 .1950
8 . முதல் தேசிய கீதம் எப்போதுப் பாடப்பட்டது ?
      27 .12 .1911
9 . உலக தமிழாராய்ச்சி நிறுவனம் எங்கு ஏற்படுத்தப்பட்டது ?
      சென்னை - 1970
10 . இந்தியாவின் முதல் சூரிய வெப்ப மின்நிலையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
       1990 - ஹரியானா 

பூமியைப் பற்றி .....

  • பூமியின் வயது 4 .6 பில்லியன் வருடங்கள்.
  • பூமியின் நிலப்பரப்பு 29 %.
  • பூமியின் நீர்ப்பரப்பு 71 % .
  • பூமியின் கன அளவு 1.083 X 1024  க.மீ.
  • பூமியின் எடை 5.976 X 1024 கி.கி.
  • பூமியின் சுற்றளவு 40075 கி.மீ.
  • பூமியிலிருந்து  சூரியனின் தொலைவு 149.6 மில்லியன் கி.மீ.
  • பூமி சூரியனைச் சுற்றும் வேகம் 1700 கி.மீ. / ம.
  • பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ள ஆகும் நேரம் 23:56:4:09.
  • பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் நேரம் 365 நாள் 6 மணி 9 நிமிடம் 9.54 வினாடிகள்.
  • பூமியின் ஆழ் கடல் பசிபிக் பெருங்கடல் 
  • பூமியின் உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் சிகரம். ( 8848 மீ. )
  • பூமியின் தாழ்ந்த நிலம் சாக்கடல் ( Dead see )
  • பூமியின் தாழ்ந்த நிலமான சாக்கடலின் தாழ்வு நிலை 399 மீ. ( கடல் மட்டத்தை விட )
  • பூமியிலுள்ள நிலங்களின் சராசரி உயரம் 756 மீ .
  • பூமியின் சம நோக்கு நாட்கள் மார்ச் 21, செப்டெம்பர் 23.
  • அதிகமான இரவும் அதிகமான பகலும் ஏற்படும் பகுதி துருவப்பகுதி.
  • பூமியின் வட கோளத்தின் நீண்ட நாள் ஜூன் 21 .
  • பூமியின் தென் கோளத்தின் நீண்ட நாள் டிசம்பர் 22 .
  • பூமியின் துருவப்பகுதியில் சாய்வு 23  1/2 ° .
  • பூமி சூரியனைச் சுற்றும் வேகம் 29.8 கி.மீ/நி. 
  • பூமி சூரியனைச் சுற்றும் அதிகபட்ச தூரம்(aphelion) 152 மில்லியன் கி.மீ.
  • பூமி சூரியனைச் சுற்றும் குறைந்த பட்ச தூரம்(perihelion) 147 மில்லியன் கி.மீ.
  •  பூமியை சூழ்ந்துள்ள வாயு மண்டலத்தின் உயரம் 960 கி.மீ.

பொன்னாங்கண்ணிக் கீரைக்கு 83 பெயர்கள்

  1. அண்டர் நிலை அலகு 
  2. அனுமான் சக்கா 
  3. அணுமாசக் கண்ணி 
  4. இந்திரானூரி 
  5. இந்திராணி காணி
  6. உடுக்காட்டி
  7. உம்பரூர் 
  8. உழவணிகச் செடி
  9. உழவணிகம்
  10. கடுஞ்சீ தளத்தி 
  11. கண்ணுக்கனி மூலம்
  12. கண்ணுக்கினியாள் 
  13. கரிப்பாலை
  14. கல்லுக்கலை  காத்தான்
  15. கல்லுக்கவைத்தளை 
  16. கற்பூரக்கண்ணி
  17. காணி
  18. காரியசித்தி
  19. காயசித்தி
  20. காளவடிவழகி
  21. கொடுப்பை
  22. சகச்சை
  23. சகாதேவி
  24. சிந்தாமணி
  25. சித்தமன்
  26. சித்தி
  27. சிதகி
  28. சிதசிக்கண்ணிச்செடி 
  29. சிதம்பூரம்
  30. சிதலிச்செடி 
  31. சிதளி 
  32. சீமைப்பொன்னாங்கண்ணி
  33. சீதளசக்தி 
  34. சீதளி 
  35. சீதனி
  36. சீதப்புறம் 
  37. சீதலிச்செடி
  38. சீதாபூரம்
  39. சீதேவி
  40. சீதேவிச்செடி
  41. சீதை
  42. சீரணிக்கண்ணிச்செடி
  43. சீரிணம்
  44. சுகதிர
  45. சுவாது வர்ணம்
  46. சூரைமான்
  47. சூரைமார்கண்ணி
  48. செங்கண்ணி
  49. செம்புசத்துமூலி
  50. சோமகண்ணி
  51. சோமவல்லரி
  52. தசமைக்கண்ணி 
  53. திரேகசித்தி
  54. தியாகக்கண்ணி
  55. தீயாக்கரை
  56. தேவரூர்
  57. நட்சத்திரத்தோன்றி
  58. நாட்டுப்பொன்னாங்கண்ணி
  59. நிரோவடி 
  60. நேத்திரநாசி
  61. பகல் நட்சத்திரத்தோன்றி
  62. பத்தூரம்
  63. பதுமாலயம்
  64. பித்தசாந்திபூனாற்கண்ணிக்கீரை
  65. பெருங்கொடுப்பை
  66. பொற்கண்ணி
  67. பொற்காணி
  68. பொன்காளி
  69. பொன்மூலி
  70. பொன்மேனி
  71. பொன்னாங்கண்ணி
  72. பௌதிக மங்கை
  73. மச்சாக்கி
  74. மச்சிக்கண்ணி
  75. மச்சியாத்தி
  76. மீனாட்சி
  77. மூசி
  78. மைசாட்சி
  79. வரிக்கண்ணி
  80. வத்தூரம்
  81. வாது வர்ணம்
  82. வானநாடி
  83. விண்ணுக்குள்  மூர்த்தி

27 விண்மீன்களின் தமிழ்ப்பெயர்கள்

வ. எண்
தமிழ்
சமற்கிருதம்

கிரேக்கம்


1
புரவி
அசுவினி
Hamal
2

அடுப்புக்கொண்டை
பரணி
Sheratan
3

ஆரல்
கார்த்திகை
Pliades

4
சகடு
உரோகிணி
Aldebaran

5
மான்தலை
மிருக சீரிடம்
Bellatrix

6
மூதிரை
திருவாதிரை
Betelgeuse

7
கழை
புனர் பூசம்
Pollux

8
காற்குளம்
பூசம்
Tegmine

9
கட்செவி
ஆயில்யம்
Acubens

10
கொடுநுகம்
மகம்
Regulas

11
கணை
பூரம்

Zozma

12
உத்திரம்
உத்திரம்
Denebola

13
ஐவிரல்
அத்தம்
D.Corvi

14
அறுவை
சித்திரை
Spica

15
விளக்கு
சுவாதி
Boots Arcturus

16
முறம்
விசாகம்
Libra

17
முடப்பனை
அனுசம்
Graffias

18

துளங்கொளி

கேட்டை
Antares

19
குருகு
மூலம்
Acumen

20
உடைகுளம்
பூராடம்
Rukbat

21
கடைகுளம்
உத்திராடம்
Facies

22

முக்கோல்
திருவோணம்
Aquila
23

காக்கை
அவிட்டம்
Delphinus
24

செக்கு
சதயம்
Sadal Malek
25

நாழி
புரட்டாதி
Markab
26

முரசு
உத்திரட்டாதி
Algenib
27

தோணி
ரேவதி
Alrescha

பத்து முதல் அனந்தம் வரை விளக்க

10   பத்து = 100
100  பத்து = 1000
1000 பத்து = 10,000
10,000 பத்து = லட்சம்
1,00,000 பத்து = பத்து நூறாயிரம்
10 நூறாயிரம் பத்து   =  கோடி
கோடி     கோடி =  மகா கோடி (10,000,000,00,00,000)
மகாகோடி  கோடி = சங்கு(சங்கம்)
சங்கு(சங்கம்) கோடி = மகாசங்கு (மகாசங்கம்)
மகசங்கு    கோடி  = விந்தம்
விந்தம்     கோடி  = மகவிந்தம்
மகவிந்தம்  கோடி  = பதுமம் (சமுத்திரம்)
பதுமம்     கோடி  = மகாபதுமம் (மகா சமுத்திரம்)
மகாபதுமம்    கோடி  =  குமுதம்
குமுதம்       கோடி  =  மகா குமுதம்
மகா குமுதம்  கோடி  =  சிந்து
சிந்து          கோடி  =  மகா சிந்து
மகாசிந்து      கோடி  =  வெள்ளம்
வெள்ளம      கோடி  =  மகா வெள்ளம
மகா வெள்ளம் கோடி  =  பிரளயம்
பிரளயம்       கோடி  =  மகா பிரளயம்
மகா பிரளயம்  கோடி  =  சஞ்சலம்
சஞ்சலம்       கோடி  =  மகா சஞ்சலம்
மகா சஞ்சலம்  கோடி  =  வலம்புரி
வலம்புரி       கோடி  =  மகா வலம்புரி
மகா வலம்புரி  கோடி  =  தன்பணை
தன்பணை      கோடி  =  மகா தன்பணை
மகாதன்பணை  கோடி  =  கண்வளை
கண்வளை      கோடி  =  மகாகண்வளை
மகா கண்வளை கோடி  =  அனந்தம்

யாருக்கு எத்தனை அறிவு?

ஓரறிவு    -    மரம், புல், பூண்டு.
ஈரறிவு     -   சங்கு, நத்தை, மீன் வகை.
மூன்றறிவு -   கரையான், ஈசல்.
நான்கறிவு  -  நண்டு, தும்பி.
ஐந்தறிவு   -   கால்நடை, பறவை.
ஆறறிவு   -   மனிதன்.

முடியவே முடியாது

யாராலும் கண்களைத் திறந்துக்கொண்டு தும்ம முடியாது.

பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது.

யானையால் குதிக்கவும் தாண்டவும் முடியாது

பன்றிகள் வானத்தை அண்ணாந்துப் பார்க்க முடியாது.

பறந்தாலும் நின்றாலும் அமர்ந்தாலும் தட்டான்பூச்சிகளுள் இறக்கையை மடக்க முடியாது.

கிவி பறவைகளால் 2 அடிகூட பறக்க முடியாது.

முதலைகளால் நாக்கை வெளியே நீட்ட முடியாது.

முதலை மற்றும் திமிங்கலம் போன்றவை மீன்களைப் போல் நீருக்குள் மூச்சுவிட முடியாது.

எந்த ஒரு காகிதத்தையும் பாதி பாதியாக ஏழு தடவைக்கு மேல் மடிக்க முடியாது.

இப்படியும் தூங்கலாம் !

வரிக்குதிரை நின்றுக்கொண்டே தூங்கும். 

பாம்புகள் கண்களைத்திறந்துக் கொண்டே கூட தூங்கும். 

 கடல் புறாக்கள் நீரில் மிதந்துக்கொண்டே தூங்கும். 

குரங்குகள் மரத்தில் தொங்கியபடியே தூங்கும். 

டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்துக்கொண்டே தூங்கும். 

குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும். 

 ராபின் இனப்பறவை பாடிக்கொண்டே தூங்கும்.

 கோழிகள் நின்றுக்கொண்டே தூங்கும். 

 வாத்துக்கள் நீரில் வட்டமடிதுக்கொண்டே தூங்கும். 

 மாடுகள், ஒட்டகங்கள் அசைப்போட்டுக்கொண்டே தூங்கும்.

Mokkai Kelvi

கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?
பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.

கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன?
பதில்: இன்னொரு பாதி?

கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?
பதில்: கல் ஈரமாகி விடும்.

கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: திருமணம் தான்.

சூரியனுக்கு 55 பெயர்கள்

சூரியனுக்கு 55 பெயர்கள்
1) அகில சாட்சி
     2) அண்டயோனி
     3) அரியமா
     4) அரிகிரணன்
     5) அருக்கன்
     6) அருணன்
     7) அலரி
     8) அழலவன்
     9) அனலி
     10) ஆதவன்
11) ஆதித்தன்
     12) ஆயிரஞ்சோதி
     13) இரவி
     14) இருள் வலி
     15) இனன்
     16) உதயன்
     17) எல்
     18) எல்லை
     19) ஏழ்பரியோன்
     20) ஒளியோன்
     21) கதிரவன்
     22) கன்ஒளி
     23) கனலி
     24) சண்டன்
     25) சித்திரபானு
     26) சுடரோன்
     27) சூரன்
     28) சூரியன்
     29) செங்கதிரோன்
     30) சோதி
31) ஞாயிறு
32) தபனன்
33) தரணி சான்றோன்
34) திவாகரன்
35) தினகரன்
36) தினமணி
     37) நபோமணி
     38) பகல்
     39) பகலோன்
     40) பங்கயன்
     41) பதங்கன்
     42) பரிதி
     43) பருக்கன்
     44) பனிப்பகை
45) பானு
46) மார்த்தாண்டன்
     47) மித்திரன்
     48) மாலி
     49) விகத்தன்
     50) விண்மணி
     51) விரிச்சி
     52) விரோசனன்
     53) வெஞ்சுடர்
     54) வெய்யோன்
     55) வெயில்

திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்

திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் அறம், பொருள், இன்பம் என முப்பெரும் பிரிவுகளையும் உள்ளடக்கியது என்பது யாவரும் அறிந்தது. ஆனால் திருக்குறளைப் பற்றி சில தெரியாத செய்திகள் இதோ.....

1. ஓலைச்சுவடிகளில் இருந்த திருக்குறள் 1612 ஆம் ஆண்டு முதன் முதலில் அச்சிடப்பட்டது.

2. திருக்குறளின் மூலத்தை முதலில் அச்சிட்டவர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஞானபிரகாசம்.

3. திருக்குறளுக்கு முதலில் உரை எழுதியவர் மணிக்குடவர் .

4. திருக்குறளை பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு  செய்தவர் வீரமாமுனிவர்.

5. திருக்குறள் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட மொழி இலத்தின் (கி.பி. 1730) .

6. திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

7. திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் இயற்றியுள்ளார்.

8. திருக்குறள்,  தமிழ்மொழியின் முதல் எழுத்து ‘அ’  வில் ஆரம்பித்து தமிழ்மொழியின் கடைசி எழுத்து  ‘ன்’ – இல் முடிந்துள்ளது.

9. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் திருக்குறள் மூன்றாம் இடத்தை வகிக்கிறது.

ஒன்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்

ஒன்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்

1. பைசா கோபுரம் ஒன்பது மாடிகளைக் கொண்டது.
2. ஆக்யங் எனும் தேளுக்கு ஒன்பது கொடுக்குகள் உள்ளன.
3. செவ்வாய் கிரகத்தில் ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் பகலாக இருக்கும்.
4. ஈரான் ஈராக் போர் ஒன்பது ஆண்டுகள் நடைபெற்றன.
5. நிலவு சாதாரணமாக இருப்பதை விட ஒன்பது மடங்கு பௌர்ணமியன்று அதிகமாக பிரகாசிக்கும்.
6. புத்த மத சடங்குகளை நடத்தி வைக்க எப்போதும் ஒன்பது துறவிகள் இருப்பர்.
7. ஐக்கிய நாடுகளின் உச்சநீதி மன்ற நடுவர்களின் எண்ணிக்கை 9.
8. சீனர்களின் அதிர்ஷ்ட எண் 9. அதை அவர்கள் பின்யின் (九 ) என உச்சரிப்பர். இதன் பொருள் நீடுழிவாழ்க.
9. நீர் உறையும் பொது ஒன்பது சதவீதம் விரிவடையும்.
10. சீன டிராகனின் பண்புகளை ஒன்பது விதமாக பிரிக்கிறார்கள்.
11. நமது உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன.
12. திருமூலரின் திருமந்திரம் ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டது.