1. ஓலைச்சுவடிகளில் இருந்த திருக்குறள் 1612 ஆம் ஆண்டு முதன் முதலில் அச்சிடப்பட்டது.
2. திருக்குறளின் மூலத்தை முதலில் அச்சிட்டவர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஞானபிரகாசம்.
3. திருக்குறளுக்கு முதலில் உரை எழுதியவர் மணிக்குடவர் .
4. திருக்குறளை பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தவர் வீரமாமுனிவர்.
5. திருக்குறள் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட மொழி இலத்தின் (கி.பி. 1730) .
6. திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
7. திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் இயற்றியுள்ளார்.
8. திருக்குறள், தமிழ்மொழியின் முதல் எழுத்து ‘அ’ வில் ஆரம்பித்து தமிழ்மொழியின் கடைசி எழுத்து ‘ன்’ – இல் முடிந்துள்ளது.
9. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் திருக்குறள் மூன்றாம் இடத்தை வகிக்கிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire